ரஷ்யாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக கருதப்படும் 4 பேர் கைது
ரஷ்யாவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு கமிட்டி இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், தெற்கு இங்குஷேத்தியா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக கருதப்படும் 4 பேர் கைது ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்கள் ரஷ்யாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பிடிபட்டவர்களிடம் இருந்து சுயமாக தயாரிக்கப்பட்ட வெடிபொருள் சாதனங்கள், கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.
ரஷ்யாவின் குடியரசுகளில் ஒன்றான இங்குஷேத்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply