இராணுவத்துடன் இணையுமாறு முன்னாள் புலிகளுக்கு அழைப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு இலங்கை இராணுவத்தில் ஒன்றிணைவதே தனது எதிர்பார்ப்பாகும் என்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரெ தெரிவித்துள்ளார். கிளிநொச்சி இராணுவ ஒத்துழைப்பு மையத்தின் ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 29 குடும்பங்களுக்கு கால்நடைகளை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இதன்போது வழங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
யுத்தால் பாதிக்கப்பட்ட இந்த வறுமை மக்களின் வாழ்வாதாரத்தினைமேம்படுத்துவதற்காக இந்த பசுமாடுகளை அவர்களுக்கு வழங்கி அவர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தினை உயர்த்தியுள்ளோம்.
நாட்டில் வாழுக்கின்ற இந்து மதத்தவரை பொறுத்தவரையில் பசு அவர்களின் தெய்வம்ரூபம். சிவபெருமான் கடவுளின் வாகனம். எனவே பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதனை தடை செய்யுமாறு இந்து அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அதனையே ஆளுநராகநானும் விரும்புகின்றேன்.
இந்த பசுமாடுகளை நன்றாக வளர்த்து பெருக்கி அவற்றிலிருந்து பாலினை பெற்று உங்கள் பொருளாதாரத்தினை உயர்த்துக் கொள்ளுமாறு வேண்டி நிற்கின்றேன் எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply