வியட்னாம் மீது விதிக்கப்பட்ட ஆயுத விற்பனை தடை முற்றிலும் நீக்கம்: அதிபர் ஒபாமா அறிவிப்பு

obama1955 முதல் 20 ஆண்டுகள் வியட்னாம் மீது அமெரிக்க தொடுத்த போர் 1975-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. வரலாற்றில் வியட்னாம் போர் என்று அழைக்கப்படும் இந்த போரில் அமெரிக்க படைகள் பெரும் இழப்பை சந்தித்தது. இதன்பிறகு வியட்னாம் மீது பொருளாதார மற்றும் ராணுவ தடைகளை அமெரிக்கா விதித்தது. பின்னர் படிப்படியாக தடைகளை நீக்கி வந்தது. எனினும் ராணுவ தளவாடங்களை விற்பதற்கான தடை மட்டும் தொடர்ந்து நீடித்தது.இந்நிலையில், 40 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் வியட்நாமிற்கான ஆயுத ஏற்றுமதி தடை நீக்கப்படுவதாக அதிபர் அறிவித்துள்ளார்.

முன்னதாக வியட்நாமிற்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள ஒபாமா அந்நாட்டு அதிபர் டிரான் டாய் குவாங் உடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, அமெரிக்கா இனி ஒப்பந்தத்தின் அடிப்படையில் இராணுவ ஆயுதங்களை வியட்நாமிற்கு விற்பனை செய்யலாம் என்று கூறினார்.

மேலும், அவர் பேசுகையில், “இரு நாடுகளின் உறவை பலப்படுத்துவதற்கான முயற்சியாகவே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். அமெரிக்காவிடம் இருந்து ஆயுத கொள்முதல்செய்வதற்கு கடந்த 50 ஆண்டுகளாக விதிக்கப்பட்டு இருந்த தடை முற்றிலும் நீக்கிக் கொள்ளப்படுகிறது. இந்த முடிவு சீனாவை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டது அல்ல. எங்களைப் பொறுத்தவரை வியட்னாமில் இயல்பான நிலை நிலவிடவேண்டும் என்றே விரும்புகிறோம். அதற்காகவே இந்த நடவடிக்கை.

இந்த நேரத்தில் இரு நாடுகளும் பரஸ்பர நம்பிக்கையும், ராணுவ ஒத்துழைப்பில் இணைந்து செயல்படுவதும் அவசியம் ஆகும். எனவேதான் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் மீது விதிக்கப்பட்ட தடைகளை முற்றிலுமாக நீக்குகிறோம். இதனால் இரு நாடுகளும் பயன்பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆயுத விற்பனை தடையை முழுவதுமாக நீக்கிக் கொண்ட அமெரிக்காவின் முடிவை வரவேற்பதாக அதிபர் குவாங் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply