நாட்டையும் எமது மக்களையும் பாதுகாக்கும் பணியில் நான் தூக்குமேடை ஏறவும் தயார்:ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

கடனை மீளச் செலுத்தக்கூடிய ஆற்றல் அரசாங்கத்திடம் இருப்பதாலேயே சர்வதேச கடன்களைப்பெற தீர்மானித்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அரசாங்கம் வெற்றிகரமான பொருளாதாரத் திட்டத்தைக் கொண்டுள்ளது. கடனை மீளச் செலுத்தும் உறுதிப்பாடும் எமக்குள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டைப் பாதுகாத்து மக்கள் எதிர்பார்ப்பை நிறை வேற்றும் போராட்டத்தில் ஒரு தூக்குமரமல்ல பத்துத் தூக்குமரத்தைச் சந்திக்கவும் தயாராகவுள்ளதாகவும் ஜனா திபதி தெரிவித்தார்.ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் 5000 பேர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையும் நிகழ்வு நேற்று முன்தினம் அலரிமாளிகை யில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண் டுள்ள உங்கள் அனைவரை யும் மகிழ்வுடன் வரவேற் பதுடன் உங்கள்மீதான பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் அர்ப்பணிப்பை நாம் மதித்து சமத்துவமாகவே உங்களைப் பார்ப்போம்.

ஜனாதிபதித் தேர்தலின் போது நான் மக்கள் ஆணையை வேண்டுகின்ற போது இந்தநாட்டு மக்கள் அனைவருமே நாடு துண்டாடப்படுவதைத் தடுத்து நாட்டைப் பாதுகாத்து ஐக் கியப்படுத்துமாறு என்னைக் கோரினர்.

இந்த நாட்டைக் காட்டிக் கொடுத்த தலைவர் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே கூற முடியும். நாட்டைப் பகுதியாகப் பிரித்து புலிகளுக்கு நிர்வாகம் வழங்கியவர் அவர். இன்று வன்னிப் பகுதியில் படையினர் மீட் டெடுக்கும் பாரியளவு ஆயுதங்களை நாம் தொலைக் காட்சி மூலமாகப் பார்க்கிறோம்.

இது வடக்கையும், கிழக்கையும் பாதுகாக்கவென புலிகள் வைத்திருந்த ஆயுதமென நீங்கள் நினைக்கிஅர்களா? இன்னும் சில மாதங்கள் தாமதமாகியிருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும்.

மக்கள் அன்று நாட்டைப்பற்றி சிந்திக்காமல் தவறான தீர்ப்பை தேர்தலில் வழங்கியிருந்தால் புலிகள் கனவுகண்ட தமிப்ழம் சுலபமாகக் கிடைத்திருக்கும். நீர்கொழும்பிலிருந்து பதுளை வரையிலான பகுதிகள் நாட்டிலிருந்து துண்டாடப்பட்டிருக்கும் ஈழம் அமைக்கப்பட்டிருக்கும். புலிகளின் எதிர்பார்ப்பு அதுவே. தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கான மக்கள் ஆதரவும் ஆணையும் எனக்குக் கிடைத்ததால்தான் நாடு பாதுகாக்கப்பட்டது. எமது அர்ப்பணிப்புடனான தீர்மானத்தைக் கண்டே மக்கள் எமக்கு ஆதரவு வழங்கினர். இதற்கு மக்கள் ஆதரவு கிடைத்திருக்கவில்லையெனில் தாய் நாட்டைப் பாதுகாக்கும் இப்பயணத்தைத் தொடர்திருக்க முடியாது. அனைத்துப் பிரசாரங்கள் அழுத்தங்களையும் எதிர்கொள்ள மக்கள் ஆதரவே உறுதுணையாகியது.

நாட்டைப் பாதுகாப்பதற்காக நாம் தற்போது கோட்டிக்கணக்கில் பணத்தை செலவிடுகின்றோம். யுத்தம் புதிதாக முளைத்ததல்ல. முப்பது வருடகாலம் பழமையானது. ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் புலிகளுக்கு வழங்கியது மட்டுமல்லாமல் உளவுப் பிரிவினரைக் கொல்லவும், பொதுமக்கள் பலியாகவும் காரணமானவர்.

இதனால்தான், ஆரம்பத்திலிருந்து கட்டியெழுப்ப வேண்டியிருந்தது. கடந்த வருடத்தில் எரிபொருள் விலையேற்றம் உலகப் பொருளாதார நெருக்கடியென பல்வேறு சவால்கள் போராட்டங்களுக்குள்ளும் நாம் அபிவிருத்தி உட்பட சகலதையும் மேற்கொண்டோம்.

எதிர்க் கட்சியினர் புதுப்பானையை புது வருடத்தில் மண்ணில் அடித்து சாபத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அரசு வீழ்ந்துவிடும் என கனவு கண்டனர். தாய் நாட்டைப் பாதுகாத்து மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் நடவடிக்கையில் தூக்குமரம் ஏறவும் நாம் தயார். ஒன்றல்ல பத்து தூக்குமரம் ஏற்கவும் நாம் தயாராகவே உள்ளோம்.

உலகம் பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்ட போதிலும் அபிவிருத்தி உட்பட யுத்தத்தை காரணங்காட்டி எதனையும் அரசாங்கம் நிறுத்தலில்லை. நாடு முழுவதிலும் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. மின்சார திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

ன்று பிரதேச அளவில் நாடு முழுவதிலும் அபிவிருத்தி இடம்பெறுகிறது. வாழ்க்கைச் செலவு 28.2 வீதத்திலிருந்து தற்போது 5.3 வீதமாக குறைவடைந்துள்ளது. உரமானியம் வழங்குவதால் அரசாங்கம் கோடிக்கணக்கில் நட்டப்படுகிறது. இத்தகைய தருணத்திலேயே மக்கள் ஆதரவை கோரிநிற்கின்றோம்.

சர்வதேசமெங்கும் சென்று எமக்குக் கடன் வழங்க வேண்டாமென எதிர்க் கட்சியினர் பிரசாரம் செய்கின்றனர். வங்கிகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். எம்மால் கடனை மீள செலுத்த முடியாது எனக் கூறிவருகின்றனர்.

எம்மால் மீள செலுத்த முடியும் என்ற உறுதியுடனேயே நாம் சர்வதேசத்தில் கடன் பெறுகின்றோம். அதற்கேதுவான பலமான பொருளாதாரத்திட்டம் எம்மிடமுண்டு.

அரசாங்கம் சகல கட்சிகளையும் கொண்ட பலமான ஐக்கியமான கூட்டமைப்பாகவே உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர அனைத்துக் கட்சிகளும் எம்முடன் உள்ளன. விரைவில் அவர்களும் வருவர். புலிகளின் இரண்டாவது தலைவரான கருணாவே எம்முடன் தான் உள்ளார் என தெரிவித்த ஜனாதிபதி சகல சவால்களையும் வெற்றிகொள்ளும் இப்பயணத்தை மேலும் சக்திப்படுத்த மேல் மாகாணத் தேர்தலில் மக்கள் முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

கழ்வில் களுத்துறை மாவட்டத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் மாகாண பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் பலரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டு அதற்கான அங்கத்துவத்தை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply