அகதிகள் படகு விபத்து: லிபிய கடற்கரையில் 75 பெண்கள் உட்பட 117 பேரின் சடலங்கள் மீட்பு
கிரீஸ் நாட்டுக்குள் குடியேறும் நோக்கத்தில் சுமார் 700 பேருடன் வந்த அகதிகள் படகு எகிப்து நாட்டை ஒட்டியுள்ள கிரெட்டே என்ற கடற்பகுதி வழியாக வந்தபோது காற்றின் போக்குக்கு ஈடுகொடுக்க இயலாமல் கடலில் கவிழ்ந்து, மூழ்கியது. இதுதொடர்பான தகவல் அறிந்ததும், இரண்டு கடலோர ரோந்து கப்பல்கள், ஒரு ராணுவ விமானம் மற்றும் மூன்று ஹெலிகாப்டர்களை கிரீஸ் அரசு தேடுதல் பணியில் ஈடுபடுத்தியது.
விரைந்துவந்த கடற்படையினர் இதுவரை 302 பேரை உயிருடன் மீட்டனர். மேலும் பலரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.
இந்நிலையில், லிபிய கடற்கரையில் சுமார் 117 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 75 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் அதில் அடங்கும். ஜூவாரா நகரின் மேற்கு பகுதி கடற்கரையை ஒட்டி அவர்கள் கரையில் மிதந்துள்ளனர்.
இறந்தவர்களிடம் லைப் ஜாக்கட் எதுவும் தென்படவில்லை. உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்கள் அனைவரும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply