இலங்கை ராணுவ வெடிப்பொருள் கிடங்கில் பயங்கர தீவிபத்து: ஒருவர் பலி – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

bbcஇலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சுமார் 33 கிலோமீட்டர் கிழக்கேயுள்ள சால்வா என்ற பகுதியில் ராணுவத்துக்கு சொந்தமான வெடிப்பொருட்களை சேமித்து வைக்கும் பெரிய கிடங்கு ஒன்றுள்ளது. இந்த கிடங்கின் ஒரு சிறிய அறையில் நேற்றிரவு திடீரென்று வெடிச்சத்தம் கேட்டது. அங்கிருந்து பறந்த தீப்பொறியால் அடுத்தடுத்த அறைகளில் வைக்கப்பட்டிருந்த ராக்கெட் புரபல்லர்கள், வெடிகுண்டுகள் மற்றும் குண்டுகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தும் மூலப்பொருட்கள் பயங்கரமாக வெடித்துச் சிதறின. சுமார் 12 கிலோமீட்டர் தூரத்துக்கு ஐந்து மணிநேரம் வரை தொடர்ந்து வெடிச்சத்தம் கேட்டதாக இந்த விபத்து தொடர்பான செய்திகளை வெளியிட்ட உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

 

விபத்து நடந்த வெடிப்பொருள் கிடங்கின் சுற்றுப்புறத்தில் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் வசித்துவந்த மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த கிடங்கை ஒட்டியுள்ள சாலைகள் மூடப்பட்டு, வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

 

இலங்கை ராணுவ வரலாற்றில் இவ்வளவு நாசத்தை ஏற்படுத்திய வெடிப்பொருள் கிடங்கு தீவிபத்து இதற்கு முன்னர் எப்போதும் நிகழ்ந்ததில்லை என ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் ஒரு ராணுவ வீரர் பலியானதாகவும், ஐந்துபேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply