கொஸ்கம சம்பவம் பரவிய தீயினால் சுவாசக் கோளாறுகள் ஏற்படும் அபாயம்
கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில் பரவிய தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசிப்பவர்களுக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படும் அபாயமுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.குறித்த பகுதியில் காணப்படும் புகையை சுவாசிப்பவர்களுக்கு ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறு ஏற்படக்கூடும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும், அந்த பகுதியில் புகைமூட்டம் தொடர்ந்தும் நிலவுகின்றது.
அகவே புகையை சுவாசித்தவர்கள் அருகில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு சென்று வைத்திய ஆலோசனை பெற்றுகொள்ளுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply