இலங்கையில் சிங்கள அறிவு இல்லாதவர்கள் வருங்காலத்தில் புறக்கணிக்கப்படக்கூடும் : விக்னேஸ்வரன்

vikiசிங்கள அறிவு இல்லாதவர்கள் வருங்காலத்தில் புறக்கணிக்கப்படக்கூடும். ஆகவே அரசியலை மறந்து தமிழர்கள் சிங்கள மொழியை கற்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் கலைமகள் திருவுருவச் சிலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த வேண்டுகொளை விடுத்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
இலங்கை வாழ் மக்களிடையே ஐயமும், சந்தேகமும், மனக்கிலேசமும், அவநம்பிக்கையும், ஆத்திரமும் ஏற்பட முக்கிய காரணம் தவறான புரிதலாகும்.

இதனால் இருமொழி பேசும் மக்களிடையே புரிந்துணர்வு ஏற்பட வேண்டுமானால் ஒருவர் மொழியை ஒருவர் கற்க வேண்டும்.

மேலும் வெளிநாடுகளுக்குச் செல்லும் தமிழ் மக்கள் அந்நாட்டிலுள்ள மொழியை கற்கின்றார்கள். ஆனால் தமிழர்கள் சிங்கள மொழியைப் புறக்கணிக்கின்றோம். இன்று சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியை கற்கத் தொடங்கியுள்ளார்கள்.

இதனால் தமிழ்ப் பேசும் சிங்கள அலுவலர்கள் வடகிழக்கு மாகாணங்களில் நியமிக்கப்படவுள்ளமையினால் முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளில் தமிழர்கள் செயற்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply