முஸ்லிம்கள் இல்லாத இந்தியா சாத்வி பிராச்சியின் கருத்துக்கு மத்திய மந்திரி கண்டனம்

Sadhvi-Prachiசர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்போது உதிர்த்துவரும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முக்கிய தலைவரான சாத்வி பிராச்சி உத்தரப்பிரதேசம் மாநிலம் ரூர்கேலாவில் நடைபெற்ற ஒருவிழாவில் கடந்த செவ்வாய்க்கிழமை உரையாற்றினார். விரைவில் நடைபெறவுள்ள உ.பி. சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் முதல் மந்திரி வேட்பாளராக யோகி ஆதித்யாநாத் முன்நிறுத்தப்பட வேண்டும் என அப்போது அவர் வலியுறுத்தினார்.

காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற முழக்கத்தில் நாம் வெற்றி பெற்று விட்டோம். தற்போது, முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டிய வேளை வந்து விட்டது என்று தனது பேச்சின் இடையே அவர் குறிப்பிட்டார். இந்த கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநில தலைநகர் கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய விவசாயத்துறை இணை மந்திரி சஞ்சீவ் பல்யானிடம் சாத்வி பிராச்சியின் சர்ச்சைப்பேச்சு தொடர்பாக நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், இதைப் போன்ற கருத்துகளை கூறுவது தவறானது. இதை நான் கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply