அமெரிக்க கூட்டுப்படையின் வான்வழி தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அல்-பாக்தாதி காயம்

isisஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்தாக்குதலை நடத்தி வருகின்றன. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவரான அபுபக்கர் அல்-பாக்தாதி, ஈராக்கில் சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அமைந்திருக்கும் தலைமையகத்தை குறிவைத்து நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. ஈராக்-சிரியா எல்லைப்பகுதிகளில், குறிப்பாக பாக்தாதி பங்கேற்ற கூட்டம் நடைபெறும் பகுதியை குறிவைத்து வான்வழி தாக்குதல்களை அரங்கேற்றின. 

 

இந்த வான்வெளி தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அல்-பாக்தாதி காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈராக்கின் நினேவெக் மாகாணத்தில் இயங்கி வரும் அல் சுமாரியா என்கிற தொலைக்காட்சி நிறுவனம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது.

 

பாக்தாதி மற்றும் ஐ.எஸ். அமைப்பின் முன்னணி தலைவர்கள் சிலரும் காயமடைந்ததாக உள்ளூரில் இருந்து உறுதியான தகவல்கள் கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியாகின.

 

அமெரிக்காவால் தேடப்படும் தீவிரவாதிகளின் பட்டியலில் இருக்கும் முதல் நபர் அல்-கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி. இரண்டாவது இடத்தில் அபுபக்கர் அல்-பாக்தாதி தான் இருப்பதாக கூறப்படுகிறது.

 

பாக்தாதி காயமடைந்ததாகவும், உயிரிழந்து விட்டதாகவும் கூட செய்திகள் பலமுறை வெளியாகியுள்ளன. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply