சீனாவில் நாய்க்கறி திருவிழாவுக்கு எதிராக பேரணி – மிருக நல ஆர்வலர்கள் போராட்டம்

China dog   சீனாவில் நாய்க்கறி திருவிழாவுக்கு எதிராக பேரணி நடத்தி 1 கோடியே 10 லட்சம் பேர் கையெழுத்திட்ட மனு கொடுக்கப்பட்டது. சீனாவில் ஆண்டு தோறும் ஜூன் 21–ந்தேதி முதல் நாய்க்கறி திருவிழா நடைபெறும். அப்போது வீட்டில் வளர்க்கப்படும் ஏராளமான நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சி விற்பனை செய்யப்படும். அதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத் திருவிழாவை நிறுத்த வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 

இந்த ஆண்டும் நாய்க் கறி திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே, அதை நிறுத்தக்கோரி தலைநகர் பெய்ஜிங்கில் மிருக நல ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

 

அப்போது அவர்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்ல நாய்க் குட்டிகளை கையில் எடுத்து வந்தனர். போரர்ட முடிவில் 1 கோடியே 10 லட்சம் பேரிடம் பெறப்பட்ட கையெழுத்துடன் கூடிய மனுவை அளித்தனர்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply