பிரேசிலில் 10 வயது சிறுமியை கற்பழித்து இதயத்தை பிடுங்கிய கொடூரன் கைது
பிரேசில் நாட்டில் மினாயிஸ் ஜெராய்ஸ் மாகாணத்தை சேர்ந்த 10 வயது சிறுமி ரெயானா அபரேசிதா காண்டிடா, சம்பவத்தன்று இவள் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது ஜெய்ரோ லோப்ஸ் (42) என்ற நபர் அந்த வழியாக வந்தான். சிறுமி ரெயானாவை பின் தொடர்ந்து சென்று அவளை கடத்தி சென்றான். பின்னர் சிறுமியை கற்பழித்து கொன்றான். அத்துடன் வெறி அடங்காத காமுகன் ரெயானாவின் உடலை பிளந்து அவளது இதயத்தை பிடுங்கி வெளியே எடுத்து விட்டு தனது பண்ணையில் புதைத்து விட்டான்.
இதற்கிடையே சிறுமியை காணாமல் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீலீசார் வழக்கு பதிவு செய்த காமுகன் ஜெய்ரோ லோப்சை கைது செய்தனர். அவன் கொடுத்த தகவலின் பேரில் சிறுமியின் உடலை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்த போது தான் இதயம் வெளியே எடுக்கப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் 500 பேர் ஆவேசத்துடன் திரண்டனர். கொடூர காமுகனை அடித்து கொல்ல வேண்டும் என வலியுறுத்தினர். எனவே, கைது செய்யப்பட்ட ஜெய்ரோ லோப்ஸ் ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டான்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply