வங்காளதேசத்தில் 3 ஆயிரம் தீவிரவாதிகள் கைது
வங்காளதேசத்தில் தற்போது தீவிரவாத செயல்கள் அதிகரித்து விட்டது. அங்கு வாழும் இந்துக்கள், புத்த மதத்தினர் உள்ளிட்ட சிறுபான்மையினர் படுகொலை செய்யப்படுகின்றனர். எனவே, அங்குள்ள தீவிரவாத குழுக்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை தொடங்கப்பட்டது. அன்று மட்டும் 1600 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். நேற்று மேலும் 1400 பேர் கைதாகியுள்ளனர். தடை செய்யப்பட்ட தீவிரவாத குழுக்களான வங்கதேச ஜமாதுல் முஜாகிதீன், வங்கதேச ஜாக்ரதா முஸ்லிம் ஜனதாவை சேர்ந்த 38 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply