இனிமேலும் நாட்டில் யுத்தமொன்று வராது- யாழ். கட்டளைகள் தளபதி

Major-General-Mahesh-Senanayaka-1எதிர்வரும் பத்து வருடங்களுக்கு அல்ல, இனிமேலும் நாட்டில் யுத்தமொன்று ஏற்பட மாட்டாது எனவும் இதுகுறித்து தனக்கு முழுமையான நம்பிக்கையிருப்பதாகவும் யாழ். இராணுவத்தின் கட்டளைகள் தளபதி மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாரத்ன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தின் களநிலவரங்களைத் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

 

யுத்தமொன்று நடைபெறாது இருந்தாலும், யாழ்ப்பாணத்தில் இராணுவம் தரித்திருப்பது அப்பிரதேச மக்களுக்கே சிறந்தது. அத்துடன், அவர்களினால் மக்களுக்கான சேவையும் இடம்பெறுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply