ஈராக்கில் கடும் சண்டை – மொசூல் நகரை மீட்க அரசு படைகள் தீவிரம்

iraqஈராக் நாட்டில் மொசூல் நகரை மீட்பதற்கு, ஐ.எஸ். போராளிகளுடன் அரசு படைகள் கடுமையாக சண்டையிட்டு வருகின்றன.ஈராக்கிலும், சிரியாவிலும், லிபியாவிலும் கடுமையாக சண்டையிட்டு முக்கிய நகரங்களை ஐ.எஸ். போராளிகள் கைப்பற்றி தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து விட்டனர். இதன் காரணமாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இந்த ஐ.எஸ். போராளிகள் பெரும் சவாலாக விளங்குகின்றனர். ஈராக்கில் ஐ.எஸ். போராளிகளை ஒடுக்குவதற்கு அரசு படைகளுக்கு அமெரிக்க கூட்டுப்படைகள் பக்க பலமாக இருக்கின்றன.

அந்த நாட்டின் மிகப்பெரிய நகரம் மொசூல் நகரம். அந்த நகரத்தை 2 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த ஐ.எஸ். போராளிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துவிட்டனர்.

இந்த நகரை ஐ.எஸ். போராளிகளிடம் இருந்து மீட்பதற்கு ஈராக் படைகள் முன்னுரிமை அளித்து வருகின்றன. இந்த நகரை மீண்டும் தங்கள் ஆதிக்கத்தின்கீழ் ஈராக் கொண்டு வருவதற்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஏற்கனவே அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி அந்த நகரை ஈராக் படைகள் மீண்டும் கைப்பற்றிவிடும் என்று நம்பிக்கையும் தெரிவித்திருந்தார்.

ஈராக் படைகளுக்கு உதவுகிற வகையில், அமெரிக்க கூட்டுப்படைகள் மொசூல் நகருக்கு தெற்கே உள்ள பகுதிகளில் ஐ.எஸ். போராளிகளின் நிலைகளை குறிவைத்து தொடர்ந்து வான்தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

இதற்கிடையே அந்த நகரை மீட்டெடுப்பதை நோக்கமாக கொண்டு ஈராக் படைகள் உக்கிரமாக சண்டை போட்டு வருகின்றன. நேற்று மொசூல் நகருக்கு 60 கி.மீ. தொலைவில் உள்ள ஹாஜ் அலி கிராமத்தை நோக்கி ஈராக் படைகள் முன்னேறின. பீரங்கிகள், கவச வாகனங்கள் அங்கு முற்றுகையிட்டுள்ளன.

ஈராக் படைகள் பல்முனை தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. மொசூலுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமத்தை ஈராக் படைகள் கைப்பற்றின.

திக்ரிஸ் ஆற்றங்கரையில் உள்ள ஹாஜ் அலி கிராமத்தை முற்றுகையிட்டது குறித்து ஈராக் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தொடக்கத்தில் ஐ.எஸ். போராளிகள் கடுமையாக எதிர்த்து சண்டையிட்டனர். ஆனால் ஈராக் படைகளின் தாக்குதலைக்கண்டு வெலவெலத்துப்போய் அவர்கள் பின் வாங்கினர்” என்றார்.

இன்னொரு முக்கிய நகரமான பலுஜாவை மீட்பதற்காகவும் ஈராக் படைகள் கடும் சண்டையிட்டு வருகின்றன.

இப்படி மொசூல், பலுஜா பகுதியில் தீவிரமான சண்டை நடந்து வந்தாலும் சேத விவரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply