மயிலட் ஆயுத களஞ்சியசாலையை அகற்றுங்கள் : சி.வி. வேண்டுகோள்
மயிலட் இல் அமைக்கப்பட்டுள்ள இராணுவ ஆயுத களஞ்சியசாலையை அகற்றுமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் இராணுவத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கொஸ்கம போன்ற ஒரு நிகழ்வு மயிலட் பிரதேசத்தில் இடம்பெற்றால், அப்பிரதேசமே முழுமையாக அழிந்து விடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.வவுனியா, உள்ளுராட்சி சபைக் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் முதலமைச்சர், யாழ். கட்டளைகள் தளபதி மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவிடமும் குறிப்பிட்டுள்ளார்.இந்த மயிலட் ஆயுத களஞ்சியசாலையினால் அப்பிரதேசத்திலுள்ள அங்குள்ள துறைமுகத்தையும் பயன்படுத்த முடியாமல் போயுள்ளதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply