புளோரிடா இரவு விடுதியில் பலியானவர்களுக்கு அஞ்சலி: அமெரிக்க கொடியின் நிறத்துக்கு மாறும் ஈபிள் டவர்
புளோரிடா இரவு விடுதியில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஈபிள் டவர் கோபுரம் அமெரிக்காவின் தேசிய கொடி நிறத்திலும் பாரிஸ் மேயர் அலுவலகம் ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியான வானவில்லின் நிறத்தில் ஒளியூட்டப்படவுள்ளது.அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் நேற்று மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். 53 பேர் காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை நடத்திய ஒமர் மட்டீன் என்ற 29 வயது வாலிபர் போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்க வரலாற்றின் கருப்புப் பக்கமாக அமைந்துப்போன இந்த கொடூர தாக்குதலால் துயருற்றுள்ள அமெரிக்க மக்களுக்கு ஆறுதல் மற்றும் ஆதரவு அளிக்கும் வகையில் பாரிஸ் நகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஈபிள் டவர் கோபுரம் அமெரிக்காவின் தேசிய கொடியில் காணப்படும் நிறங்கள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியான வானவில்லின் நிறத்தில் இன்றிரவு ஒளியூட்டப்படும் என பாரிஸ் நகர மேயர் ஆன்னி ஹிடால்கோ அறிவித்துள்ளார்.
இதேபோல், பாரிஸ் நகர மேயர் அலுவலகமான சிட்டி ஹால் கட்டிடமும் மேற்கண்ட நிறங்களில் இன்றிரவு ஒளியூட்டப்படவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply