பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் போலீஸ் கமாண்டர் மற்றும் அவரது மனைவியை குத்திக் கொன்றவனிடம் இருந்து குழந்தையை காப்பாற்ற கொலையாளியை போலீசார் சுட்டுக் கொன்றனர்

FRANCEபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் போலீஸ் கமாண்டர் மற்றும் அவரது மனைவியை குத்திக் கொன்றவனிடம் இருந்து குழந்தையை காப்பாற்ற கொலையாளியை போலீசார் சுட்டுக் கொன்றனர்.பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகேயுள்ள புறநகர் பகுதியான மேக்னன்வில்லியில் உள்ள ஒரு வீட்டின் வாசலில் போலீஸ் கமாண்டரை ஒருவன் கத்தியால் குத்தி கொல்ல முயற்சிப்பதாக அதிரடிப்படை ரோந்து போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக அங்கு விரைந்த அதிரடிப் படையினர் அங்கு சுமார் 42 வயது மதிக்கத்தக்க போலீஸ் கமாண்டர் அவரது வீட்டு வாசலில் பிணமாக கிடந்தைதை கண்டனர்.

கொலையாளி அந்த வீட்டினுள் பதுங்கி இருக்கலாம் என யூகித்த போலீசார், அவனை வெளியே வந்து சரண் அடையும்படி எச்சரித்தனர்.

போலீசாரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத கொலையாளி, அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினான். உள்ளேயிருந்த மூன்று வயது ஆண் குழந்தை உயிர் பயத்தால் அலறியது. இதையடுத்து, அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்த போலீஸ் படையினர் கொலையாளியை சுட்டுக் கொன்றனர்.

வீட்டினுள் போலீஸ் கமாண்டரின் மனைவி பிணமாக கிடந்தார். அந்த கொலையாளி யார்? இந்த சம்பவத்துக்கான பின்னணி என்ன? என்பது தொடர்பாக பாரிஸ் நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட கொலையாளி ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக முழக்கம் இட்டதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply