வெளிநாட்டு நீதிபதிகள் என்ற பேச்சிற்கே இடமில்லை! மீண்டும் தெரிவித்தது அரசு
பொறிமுறையில் வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு இருக்காது என அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் ஆரம்பாகியுள்ள நிலையில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை என்பதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தெளிவான நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்புடன் இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணை நடத்தப்படும் என சில தரப்பினர் போலியான பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.வெளிநாட்டு நீதவான்கள் அழைக்கப்பட மாட்டார்கள் எனவும் தொழில்நுட்ப உதவி பெற்றுக்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியேற்றப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இராணுவத்தினரை எவரும் தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். படையினர் நாட்டை பாதுகாப்பதில் பங்களிப்பினை வழங்குவர் என அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply