வங்கதேசத்தில் பயங்கரவாதத் தடுப்பு: கைது எண்ணிக்கை 8,569-ஆக உயர்வு
வங்கதேசத்தில் பயங்கரவாதத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,569 ஆக உயர்ந்துள்ளது.முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வங்கதேசத்தில், அண்மைக் காலமாக ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர், மதச் சார்பற்றவர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.முன்னதாக, ஹிந்து பூஜாரிகள், தையற் கலைஞர், கிறிஸ்தவ வணிகர் உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.
மேலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறை அதிகாரி பாபுல் அக்தரின் மனைவியை பயங்கரவாதிகள் படுகொலை செய்தனர்.இந்தச் சம்பவங்களால், மதவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வங்கதேச அரசுக்கு சர்வதேச அளவில் நிர்பந்தம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.இந்தச் சூழலில், அரசு தீவிர பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. அந்த அதிரடி நடவடிக்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 5,320 பேர் கைது செய்ப்பட்டனர்.
இந்தச் சூழலில், பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் 8.569 பேரைக் கைது செய்துள்ளதாக டாக்கா காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஏ.கே.எம். காமருல் அஷன் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் 119 பேர் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுவதாக அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply