நீண்ட காலமாக அமெரிக்க விடுதிக்கு வந்த துப்பாக்கிதாரி
அமெரிக்காவின் ஓர்லாண்டோ இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய உமர் மடீன், நீண்ட காலமாக அந்த விடுதிக்கு அடிக்கடி வந்து சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அந்த நபரை அடிக்கடி அங்கு பார்த்திருப்பதாவும், ஒரு டஜன் முறைக்கு அதிகமாக அவர் மது அருந்துவது வழக்கம் என்றும் அந்த கிளப்பில் உமர் மடீனை நேரில் பார்த்தவர்கள் கூறியதாக, உள்ளூர் மற்றும்
தேசிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதல் நடந்து கொண்டிருந்தபோது, போலீசாருடன் தொலைபேசியில் பேசிய மடீன், ஒன்றுக்கொன்று முரண்பாடுள்ள தீவிரவாதக் குழுக்களுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்ததாக எஃப்.பி.ஐ கூறியதை அடுத்து இந்தத் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
அமெரிக்காவுக்கு வெளியில் இருந்து துப்பாக்கிதாரிக்கு எந்த உதவியோ அல்லது உத்தரவோ வந்ததற்கான தெளிவான ஆதாரம் ஏதும் இல்லை என்றும், இது உள்நாட்டிலேயே உருவான தீவிரவாதம் என்றும் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.
பிரார்த்தனை
இதற்கிடையில், கேளிக்கை விடுதி தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய மூத்த இமாம் ஒருவர்,
வெறுப்பு, அழிவு உள்ளிட்ட எதிர்மறை கோட்பாடுகளுக்கு எதிராக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்பதாகத் தெரிவித்தார்.
பிரிட்டன், ஃபிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளிலும் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
அமெரிக்காவின் சமீபத்தில வரலாற்றில் மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவமாகப் பார்க்கப்படும் இந்த சம்வவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த, வரும் வியாழக்கிழமை ஃபுளோரியா செல்கிறார் ஒபாமா.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply