திபெத்திய தலைவர் தலாய் லாமாவுடன் ஒபாமா இன்று சந்திப்பு

obamaசீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் திபெத் நாட்டை தனிநாடாக அறிவிக்கக்கோரும் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் புத்தமத துறவியான தலாய் லாமா அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யும் வேளைகளில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வாஷிங்டன் நகரில் இருந்தால் அதிபரின் வெள்ளை மாளிகையில் தலாய் லாமாவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசுவது வழக்கம்.

அவ்வகையில், தற்போது வாஷிங்டன் நகரில் தனது அலுவல்களை கவனித்துவரும் ஒபாமா, வெள்ளை மாளிகையில் இன்று தலாய் லாமாவை சந்தித்துப் பேசுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதன்கிழமை காலை புனிதத்துக்குரிய தலாய் லாமாவை அதிபர் சந்தித்து பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநாடாக பிரிய வேண்டும் என மக்கள் விரும்பும் திபெத் நாடு சீனாவின் ஒரு அங்கம்தான் என்பதை அமெரிக்கா கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ளது. எனினும், தனிநாடு கேட்டு போராடிவரும் திபெத்தியர்களுக்கு தலைமை தாங்கிவரும் தலாய் லாமாவை அமெரிக்க அதிபர்கள் சந்தித்துப் பேசுவது சீனாவுக்கு எரிச்சலூட்டும் செய்தியாகவே அமைந்து வருகிறது.

முன்னதாக நேற்று வாஷிங்டன் நகரில் பிரபல செய்தி நிறுவனத்துக்கு தலாய் லாமா பேட்டியளித்தார். அப்போது, புளோரிடா இரவு விடுதி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு பின்னர், முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்துவரும் அமெரிக்க அதிபர் பதவிக்கான வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி வருவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த தலாய் லாமா கூறியதாவது:-

தனது மனதில் தோன்றும் கருத்தை கூறும் உரிமை டொனால்ட் டிரம்புக்கு உண்டு. ஆனால், அவரை நான் சந்திக்க நேர்ந்தால் உங்களது நிலைப்பாட்டுக்கான காரணம் என்ன? என்பதை விபரமாக கூறுங்கள் என்று கேட்பேன். புத்தமதம் உள்ளிட்ட எல்லா மதம்சார்ந்த சமூகத்திலும் வம்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அவர்களை அதே மதத்தை சேர்ந்த மற்றவர்களுடன் இணைத்துப் பார்க்க கூடாது.

முஸ்லிம்களில் சில தனிநபர்கள் சில தீவிரவாத தாக்குதல்களை நடத்தலாம். அதற்காக, முஸ்லிம் தீவிரவாதிகள் என பொத்தம்பொதுவாக நாம் கூற கூடாது. இது தவறென்று நான் நினைக்கிறேன்.

புளோரிடா இரவு விடுதியில் நடந்த தாக்குதல் மிகவும் கொடூரமான சோக சம்பவம். இதில் பலியானவர்களின் ஆன்மா சாந்தியடைய மவுன பிரார்த்தனையில் ஈடுபடுவோம். என்னைப்போன்ற புத்த துறவிகள் பிரார்த்தனைகளில் அதீத நம்பிக்கை கொண்டிருந்தாலும் நல்ல கல்வியறிவு, இரக்க சுபாவம், சகிப்புத்தன்மை போன்ற செயல்பாடுகளால் தான் மாற்றத்தை உண்டாக்க முடியும்.

அதேபோல், துணிச்சலை இழக்காமல் இருப்பதும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிறிது பிரார்த்தனையும் செய்வது நல்லது. அதனால் தீமை ஏதுமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply