சிரியாவில் நடந்த வான் தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தினர் 10 பேர் பலி
உள்நாட்டுப்போர் நடந்து வந்த சிரியா நாட்டில் போர் நிறுத்தம் அமலில் இருந்து வருகிறது. இருந்தாலும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். உள்ளிட்ட முக்கிய போராளிகள் குழுக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன.இந்த நிலையில் துருக்கியின் மீது தாக்குதல் நடத்துவதற்கு சிரியாவின் வட பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். இயக்கத்தினர் சதித்திட்டம் தீட்டியதாக தெரிகிறது.
இது குறித்த உளவு தகவல் கிடைத்ததும், ஐ.எஸ். இயக்கத்தினர் ஆதிக்கம் செலுத்தி வந்த பகுதிகளில் 17 இலக்குகளை குறி வைத்து துருக்கி பீரங்கி தாக்குதல் நடத்தியது. அமெரிக்க கூட்டுப்படைகளும் வான்தாக்குதலில் ஈடுபட்டன. இந்த தாக்குதல்களில் மொத்தம் 10 பேர் உயிரிழந்ததாக துருக்கி ராணுவ வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply