அமெரிக்காவில் 2 வயது சிறுவனை முதலை இழுத்து சென்றது
அமெரிக்காவின் நெப்ரஸ்கா மாகாணத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் விடுமுறைக்காக புளோரிடா மாகாணத்தில் ஆர்லண்டோ நகரில் உள்ள டிஸ்னி உல்லாச விடுதிக்கு வந்திருந்தனர்.அவர்கள் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 9.16 மணிக்கு அங்குள்ள கடற்கரையில் உற்சாகமாக பொழுதை கழித்துக்கொண்டிருந்தனர். அப்போது கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த அவர்களது 2 வயது மகனை ஒரு முதலை தண்ணீருக்குள் இழுத்துக்கொண்டு போய்விட்டது. சிறுவன் அலறவும், உஷார் அடைந்த தந்தை தண்ணீருக்குள் பாய்ந்து சென்று முதலையிடம் இருந்து மகனை இழுத்து வர முயற்சித்தார். ஆனால் அவரால் இயலாமல் போய்விட்டது. முதலை, அந்தச் சிறுவனுடன் ஆழ்கடலுக்குள் போய் விட்டது.
இது தொடர்பாக அவர் போலீசில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து கடலில் சிறுவனை தேடும் பணியில் 50 போலீசாரும், வனவிலங்கு வல்லுனர்களும் ஈடுபட்டுள்ளனர்.
தங்கள் கண்முன்னே அன்பு மகனை முதலை பறித்து சென்ற தவிப்பில் இருந்து மீள முடியாமல் பெற்றோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
புளோரிடாவில் 1948-ம் ஆண்டில் இருந்து இதுவரை 22 பேர் முதலைகளுக்கு பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply