பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகக்கூடாது:பிரதமர் ரணில் விக்ரமசிங்க

ranilஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் அங்கம் வகிக்கவேண்டும் அதில்லிருந்து பிரித்தானிய விலகக்கூடாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பிரித்தானிய செய்திசேவை ஒன்றுக்கு கருத்துரைக்கையிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுமானால் அது இலங்கை உட்பட்ட 80 நாடுகளை பாதிக்கும். அத்துடன் அது சர்வதேச வர்த்தகத்தையும் பாதிக்கும் என்று ரணில் விக்கிரமசிங்கதெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து ஜி எஸ்.பி பிளஸ் சலுகையை இலங்கை எதிர்பார்த்திருக்கும் நிலையில் பிரித்தானியா அதிலிருந்து விலகக்கூடாது என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply