சிறிசேனா அதிபரான பிறகு இலங்கை உடனான உறவு வலுவடைந்துள்ளது: இந்திய தூதர் ஒய்.கே.சின்கா
21-ம் நூற்றாண்டில் இந்தியா-இலங்கை உறவு என்ற தலைப்பிலான கருத்தரங்கம் கொழும்பில் உள்ள பண்டார நாயக்கா சர்வதேச படிப்பகத்தில் நடைபெற்றது.இதில், இலங்கைக்கான இந்திய தூதர் ஒய்.கே.சின்கா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் சிறிசேனா அதிபரான பிறகு இந்தியா-இலங்கை உடனான உறவு வலுவடைந்துள்ளது என்று கூறினார்.
மேலும் அவர் பேசியதாவது:-
சிறிசேனா பதவியேற்ற பிறகு பல்வேறு உயர் மட்ட அதிகாரிகள் மட்டத்திலான சுற்றுப் பயணம் இருநாடுகளிடையே நடைபெற்றது. முதலில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கை பயணம் மேற்கொண்டார். 1987-ம் ஆண்டிற்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் இலங்கை சென்றது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 2015-க்கு பிறகு சிறிசேனா இரண்டு முறை இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு வந்தார்.
சிறிசேனா அதிபரான பிறகு இந்தியா-இலங்கை உடனான உறவு வலுவடைந்துள்ளது. இந்தியா-இலங்கை இடையில் வளர்ந்து வரும் உறவால், இருநாடுகளிடையேயான வர்த்தக உறவு மைல்கல்லை எட்டியுள்ளது.
1999-ம் ஆண்டு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, இலங்கையின் ஏற்றுமதி 13 மடங்கு உயர்ந்துள்ளது.
இவ்வாறு ஒய்.கே.சின்கா தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply