அதிமுக அரசின் மதுவிலக்குக் கொள்கை வெறும் கண்துடைப்பு :கனிமொழி

kanimoliதஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற கனிமொழி, செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’எந்த மதுக்கடையை மூடப் போகிறோம் என்பதில் தெளிவு இல்லை. மேலும், மதுக்கடைகளில் இரவு 10 மணிக்கு பிறகும் மது விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், இந்த ஆட்சி மதுவிலக்கு கொள்கையில் எந்த அளவுக்கு உறுதியாக உள்ளது என்பது தெரிகிறது. மதுவிலக்குக் கொள்கை என்பது வெறும் கண்துடைப்பாக இருக்கிறது. மதுக்கடைகளை மூடுவதற்கான எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

ஆட்சியில் இல்லாதபோதுதான் ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களின் பிரச்னைகளை பற்றி பேசுவார். ஆட்சியில் இருக்கும்போது அதை தீர்க்க நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. அதுபோலத் தான் பிரதமரை முதல்வர் சந்தித்தபோதும் முக்கியமான பல பிரச்னைகளை எழுப்ப தவறிவிட்டார்.

இந்த ஆட்சி விவசாயிகளுக்கு எதிரானது. குறைந்தபட்சம் மற்ற மாநிலங்களுடன் பேசி விவசாயிகளுக்கு தேவையான நீரையாவது பெற்றுத் தர வேண்டும். சாகுபடியின்போது தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் ஒவ்வொரு முறையும் பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இனிமேலாவது தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு விவசாயிகள் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகளுக்காக திமுகவின் குரல் ஓங்கி ஒலிக்கும்’’ என்றார் கனிமொழி.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply