2017 இற்கு முன்னர் GSP+ மீண்டும் இலங்கைக்கு : பிரதமர்

ranilஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை 2017ஆம் ஆண்டிற்கு முன்னர் மீண்டும் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.விசேட அறிக்கை ஒன்றின் மூலமே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக விண்ணப்பித்துள்ள பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது லண்டன் விஜயம் செய்துள்ள பிரதி அமைச்சர், அங்குள்ள இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது, மனித உரிமை நிலவரங்களை காரணம் காட்டி இந்த வரிச்சலுகை ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply