யாழ்ப்பாணம் விளையாட்டரங்கை திறந்து வைத்தார் மோடி

maithiriஇலங்கை- இந்திய உறவை வளர்ப்பதற்காக நாங்கள் உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் அதனை சில கடும்போக்காளர்கள் விமர்சிக்கிறார்கள்.ஆனால் பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலும் உறவை வளர்க்க நாங்கள் தொடர்ந்தம் முயற்சிக்கிறோம்.நீண்டகாலம் எங்களுடைய நாடு போரினால் பாதிக்கப்பட்டது. அந்த போர் நிறைவடைந்து சமாதானம் உருவானதன் பின்னர் இலங்கையில் பல அபிவிருத்தி தேவைகளுக்காக இந்திய அரசாங்கம் எமக்கு வழங்கும் உதவிகளுக்காக இலங்கை மக்கள் சார்பில் இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும் நாம் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

மேற்கண்டவாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கம் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் புனரமைக்கப்பட்ட நிலையில் அதன் திறப்பு விழா நிகழ்வில் இன்றைய தினம் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி அங்குஉரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

இந்நிகழ்வில் மேலும் அவர் உரையாற்றுகையில்,

இந்த விளையாட்டரங்கத்தின் திறப்பு விழா இந்திய- இலங்கை நட்புறவின் முக்கிய அம்சமாகும். இந்தியா- இலங்கை இடையில் சரித்திரகாலம் தொடக்கம் நல்ல உறவு பேணப்படுகின்றது.

இந்தியா ஊடாகவே இலங்கைக்கு பௌத்த தர்மம் கிடைக்கப் பெற்றிருக்கின்றது. எமது நாட்டின் அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது.

நீண்டகால போரினால் பாதிக்கப்பட்ட எங்களுடைய நாடு அந்த போர் நிறைவடைந்து சமாதானத்தை அடைந்த பின்னர் இந்தியா பல்வேறு அபிவிருத்தி பணிகளுக்காக எமக்கு உதவிகளை செய்து வருகின்றது.

இதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம். இதேபோல் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் நாங்கள் எங்களுக்கிடையிலான நட்புறவை வளர்த்துக் கொள்ள முயற்சிகளை செய்கிறோம். இதனை கடும்போக்காளர்கள் சிலர் விமர்சிக்கின்றார்கள்.

மேலும் விளையாட்டரங்கம் திறப்பு தேசிய நல்லிணக்கத்துடன் தொடர்புபட்ட விடயமாகும். இது நல்லிணக்கத்திற்கான இடமாக இருக்கின்றது. எனவே துரையப்பா விளையாட்டரங்கு நல்லிணக்க முயற்சியின் அடையாளமாக இருக்கின்றது.

இதேபோல் அல்பிரட் துரையப்பா கொல்லப்பட்ட சம்பவமானது ஒரு ஜனநாயக விரோதமான சம்பவமாகும் என்பதையும் நான் கூறிவைக்க விரும்புகிறேன்.

மேலும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் புனரமைக்கப்பட்ட இந்த விளையாட்டரங்கத்திற்காக நாம் இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

இன்றைக்கு இங்கே யோகாசன பயிற்சிகளை மாணவர்கள் செய்யும் நிலையில் இந்தியா- டில்லியிலும் மாணவர்கள் யோகா பயிற்சிகளை செய்கின்றார்கள் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply