படகு அகதிகளை தரைக்கு வர அனுமதிக்குமாறு இந்தோனேசிய துணை ஜனாதிபதி உத்தரவு
இந்தோனேசியாவின் ஆச்சே மாநில அதிகாரிகள் படகில் இருந்த இலங்கை புகலிட கோரிக்கையாளர்களை இன்று தரைக்கு வர அனுமதித்துள்ளனர்.சர்வதேச அழுத்தங்களை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.கடந்த ஒரு வார காலமாக படகில் இருந்த சிறுவர்கள், பெண்கள் உட்பட 44 இலங்கை அகதிகளை தரைக்கு வர ஆச்சே மாநில அதிகாரிகள் அனுமதி மறுத்து வந்தனர்.எனினும் அகதிகள் கரைக்கு வர இன்று அனுமதித்துள்ளதுடன் அவர்கள் கரையோரம் போடப்பட்டுள்ள கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்திய கொடியுடன் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் படகு பழுதடைந்தது.
கரைக்கு வர அனுமதிக்கப்பட்ட அகதிகளை அடையாளம் காண்பதற்காக பொலிஸ் அதிகாரிகள் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
அகதிகள் சென்ற படகு திருத்தியமைக்கப்பட்டுள்ளதுடன் காலநிலை சீரானதும் திருப்பி அனுப்புவதற்காக அகதிகள் சர்வதேச கடற்பரப்பிற்கு கொண்டு சென்று விடப்பட உள்ளதாக அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்தனர்.
படகில் வந்த அகதிகளை கரைக்கு வர அனுமதிக்குமாறு இந்தோனேசிய துணை ஜனாதிபதி ஆச்சே மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply