சுன்னாகம் மின் உற்பத்தி நிலையம் இம்மாத இறுதியில் திறப்பு

‘வடக்கு வசந்தம்’ அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வடக் கின் சகல கிராமங்களுக்கும் இவ்வருட இறுதிக்குள் மின்சார வசதியைப் பெற்றுக்கொடுக்கும் விசேட திட்டமொன்று அமைச்சர் ஜோன் செனவிரத்னவின் நேரடி கண்காணிப்பின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்வலு, எரிசக்தி அமைச்சு தெரிவித்தது. இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆறு இலட்சம் குடும்பங்களுக்குத் தடையின்றி மின்சாரத்தை வழங்கும் நோக்கில் சுன்னாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மின் உற் பத்தி நிலையம் இம்மாத இறுதிக்குள் ஆரம்பித்து வைக்கப் படவுள்ளதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார். சுன்னாகம் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இம் மின் நிலையத்தில் 36 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

கடந்த முப்பது வருடகாலமாக பயங்கரவாதிகளின் பிடிக்குள் அகப்பட்டு மின்சாரமின்றியுள்ள வடக்கிலுள்ள கிராமங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் மின்சாரம் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இம்மாவட்டத்திலுள்ள மின் பிறப்பாக்கிகள், மின்விநியோ கத்திற்கான உபநிலையங்கள் மற்றும் அதனோடு தொடர்புபட்ட உபகரணங்களும் புனரமைக்கப்படவுள்ளது.

அண்மைக் காலங்களில் பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டுவரும் பிரதேசங்கள் அபிவிருத்திக்கு உள் ளாக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் மாங்குளம் வீதிக்குத் தற்போது மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மெனிக்பாம் பிரதேசம் உட்பட அதனை அண்டிய பிரதேசங்களுக்கு 60 இலட்சம் ரூபா செலவில் மின்சாரம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதுடன் பதவியபொது வைத்தியசாலைக்கும் முழுமையாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply