மீண்டும் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவேன் : மஹிந்த ராஜபக்ஷ

mahindaஎதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.ஜப்பானுக்கு சென்றிருந்த அவர் ஜப்பான் டைம்ஸுக்கு வழங்கிய செவ்வியில் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.தாம், மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக வரமுயற்சித்தபோதும் அதற்கு தடையேற்பட்டது. எனினும் பிரதமர் நிலைக்கு போட்டியிட தடையில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் அரசியல்வாதிகளுக்கு எப்போதும் ஒய்வு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இறுதிப்போர் தொடர்பாக கருத்துரைத்த மஹிந்த ராஜபக்ச, நிலைமையை வேலுப்பிள்ளை பிரபாகரன் தவறாக எடை போட்டுவிட்டதாக தெரிவித்தார்.

எனினும் விடுதலைப்புலிகள் மீளிணைவதை தடுப்பதில் தற்போதைய அரசாங்கம் தவறிவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

போரின் பின்னர் வடக்கின் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப தாம் பாரிய உதவிகளை செய்த நிலையில் அவர்களை தாம் நம்பியிருந்தபோதும் அவர்கள் தமக்கு வாக்களிக்கவில்லை என்பதை கவலையளிப்பதாக மஹிந்த ராஜபக்க தெரிவித்தார்.

இலங்கையின் கடற்படையினருக்கு பொதுமக்களின் காணிகளில் ஆடம்பர ஹோட்டல்களை நடத்த அனுமதி வழங்கியமை குறித்த கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கடற்படையினர் ஏதாவது செய்வதே முக்கியம் என்று குறிப்பிட்டார்.

தீவிரவாத பௌத்த குழுக்கள் முஸ்லிம் மக்கள் மீது நடத்திய தாக்குதல் தொடர்பில் ஜப்பான் டைம்ஸ் மஹிந்த ராஜபக்சவிடம் வினவியபோது அதற்கு அவர் குறுகிய கண்டனத்தை மட்டும் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply