இந்தோனேசியாவில் வெள்ளம், 31 பேர் உயிரிழப்பு, 19 பேர் மாயம்
இந்தோனேஷியாவில் சனிக்கிழமை முதல் தொடர்ந்து பெய்த அடை மழையினால் மத்திய ஜவாவில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், பல இடங்களில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.நாட்டின் ஜாவா தீவின் மத்தியப் பகுதிகளில் வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் மாடிகளில் தஞ்சமடைந்து உயிர் தப்பியுள்ளனர். ஏராளமான வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பெரும்பாலான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்பிரதேசத்தின் மக்களுடைய இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்படைந்துள்ளதுடன், 19 பேர் இதுவரையில் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு, தாற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்தும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply