கம்மன்பில கைது முதலாவது வேட்டை:விமல் வீரவன்ச
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான உதய கம்மன்பிலவைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளமையை, தேசிய சுதந்திர முன்னணி வன்மையாகக் கண்டிப்பதாக அம்முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மூலமாக முன்னெடுக்கப்படும். உதய கம்மன்பில கைதுசெய்யப்பட்ட விவகாரம், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் வாயை அடைப்பதற்காகவே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும் அம்முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply