மொஹமட் முஸம்மில் கைது
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் இவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த வழக்கு விசாரணையின் அடிப்படையிலேயே இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம் அவர் புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்படவுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply