ஆப்கானிஸ்தானில் 60 பயணிகளை கடத்திய தீவிரவாதிகள்

afganஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் ஹெல்மண்ட் மாகாணம் உள்ளது. அங்குள்ள கரேஸ்க் மாவட்ட நெடுஞ்சாலையில் பஸ்கள் மற்றும் கார்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தன. திடீரென அங்கு தீவிரவாதிகள் வந்து குவிந்தனர். பின்னர் துப்பாக்கி காட்டி மிரட்டி வாகனத்தை நடு வழியில் நிறுத்தினர்.அந்த வாகனங்களில் இருந்த 60 பயணிகளை கடத்தி சென்றனர். அவர்களை எங்குகொண்டு சென்றனர் என்ற விவரம் தெரியவில்லை. இதற்கிடையே இக்கடத்தலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்.

இது குறித்து தலிபான் தீவிரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் களியூசுப் அகமதி கூறும் போது, கடத்தப்பட்ட பயணிகளில் 27 பேரை தவிர 33 பேர் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தார். அவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர்.

தலிபான் தீவிரவாதிகள் அரசு ஊழியர்களை குறி வைத்து இந்த கடத்தல் சம்பத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply