வடகொரியா மேலும் 2 ஏவுகணைகளை சோதித்தது; ஒன்று தோல்வி, மற்றொன்று வெற்றி

north0139167701_North-Korea-tested-missiles-and-2-One-failed-the-other_SECVPFவடகொரியாநேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு நடுத்தர ஏவுகணைகளை நாட்டின் கிழக்கு கடலோர பகுதிகளில் சோதித்தது. இந்த ஏவுகணைகளில் ஒன்று, 150 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து கடலில் விழுந்து விட்டது. இது தோல்வி ஆகும். மற்றொரு ஏவுகணை 400 கி.மீ. பாய்ந்து, செங்குத்தாக 1,000 கி.மீ. அளவுக்கு சென்று இலக்கை தாக்கியது. இது வெற்றி ஆகும். வடகொரியா கடந்த 4 ஏவுகணை சோதனைகளில் தோல்வி கண்ட நிலையில் இந்த வெற்றி குறிப்பிடத்தகுந்ததாக கருதப்படுகிறது. சோதிக்கப்பட்ட 2 ஏவுகணைகளும் முசுடன் வகை ஏவுகணைகள் என நம்பப்படுகிறது. வடகொரியாவின் ஏவுகணைகள் சோதனை பற்றி தென்கொரியாவின் ராணுவ தளபதி கூறும்போது, “வடகொரியாவின் இரண்டாவது ஏவுகணை சோதனை குறித்து சியோலும், அமெரிக்காவும் தீவிரமாக ஆய்வு செய்கின்றன” என்றார்.

வடகொரியா நடத்தியுள்ள இரு ஏவுகணை சோதனைகளைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து உயர்மட்டக்கூட்டம் ஒன்றை நடத்தப்போவதாக தென்கொரிய அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply