ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பது தொடர்பான பொதுவாக்கெடுப்பு நடைபெறுகின்றது!
லண்டனில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பது தொடர்பான பொதுவாக்கெடுப்பு இன்று தொடங்கியது.லண்டனில் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க கோரும் தலைவர்களும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்களும் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றனர். அதில் குடியேற்றம், பொருளாதாரம் என்பன உள்ளிட்ட பல தலைப்புகளில் இரு தரப்பினருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
தேவையற்ற அச்சத்தை பரப்புவதாகவும் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும் இரு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. பிரிட்டனில் சுமார் 14.5 லட்சம் இந்திய வம்சாவளியினரும், 11.7 லட்சம் பாகிஸ்தானிய வம்சாவளியினரும் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக்கெடுப்பில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply