ஜி.எஸ்.பி வரிச்சலுகை வழங்க வேண்டாம்; கட்டுநாயக்கவில் ஆர்ப்பாட்டம்

Europaஊழியர்களின் நலன்களையும், உரிமைகளையும் பறித்தெடுக்கும் தொழிற்சாலைகளுக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்க வேண்டாம் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள 5 தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று புதன்கிழமை மாலை இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளன.தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்ற தொழிற்சாலைகளுக்கும், அவைகளது உரிமையாளர்களுக்கும் இந்த வரிச்சலுகையை அரசாங்கம் வழங்கக்கூடாது என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.

இதேவேளை தனியார் பிரிவினருக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபா உயர்வை அடிப்படைச் சம்பளத்துடன் இணைக்குமாறு கோரி தென்னிலங்கையின் காலி நகரில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

காலி நகரிலுள்ள தொழிலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் காலி உதவி தொழிற்துறை ஆணையாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply