உலகத்திலேயே பெருமளவானவர்களை மீட்கும் நடவடிக்கை:சரத் பொன்சேகா

இப்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பெருமளவான மக்களை மீட்கும் நடவடிக்கையானது உலகத்திலேயே பெரும் எண்ணிக்கையானவர்களை மீட்கும் நடவடிக்கையாக அமையும் என இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.மக்கள் செறிந்துவாழும் பகுதிகளிலேயே விடுதலைப் புலிகள் தமது கனரக ஆயுதங்களைப் பொருத்தி அங்கிருந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில் புதுக்குடியிருப்பை முழுமையாக மீட்டிருப்பதாகவும், எஞ்சிய விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பாதுகாப்பு வலயத்துக்குள் ஒழிந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.எனினும், பாதுகாப்பு வலயத்துக்குள் செல்வதற்கு அரசாங்கப் படைகள் அவசரம் காட்டவில்லையெனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கூறியுள்ளார். பாதுகாப்பு வலயத்துக்குள் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எந்தவிதமான காலவரையறையும் கூறமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply