5 மணித்தியாலத்தில் 2000க்கும் அதிகமான மக்கள் வெளியேறினர்

முல்லைத்தீவு கடற்கரைப் பிரதேசத்தில் புதுமாத்தளனில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான 12 கி.மீ நீளமான பாதுகாப்புப் பிரதேசத்தை சுற்றிவளைத்துள்ள இராணுத்தின் 55, 58, 53, 59ம் படையணிகள் மற்றும் செயலணி 8ம் அடுத்து வரும் நாட்களில் பெருமளவிலான மக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி வருவார்களென எதிர்பார்ப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்புக்கு கிழக்காக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மிகச்சிறிய ஒரு துண்டு நிலப்பகுதியையும் இழந்த புலிகள் தற்போது `யுத்த சூனிய` பிரதேசத்தில் உள்ள மக்களை முழுமையாக மனித கேடயமாக்கி உள்ளனர்.  புலிகள் தமது கடைசி இருப்பை காப்பாற்றும் முயற்சியில் இராணுவம் அறிவித்த மக்கள் பாதுகாப்பு பிரதேசத்தை  யுத்த பூமியாக்கி வருவதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவத்தின் 58ம் படையணி நேற்று (ஏப். 5) அம்பலவன் பொக்கணையை அண்மித்த போது சுமார் 5 மணித்தியாலத்தில் 2127 மக்கள் பாதுகாப்பு பிரதேசத்தை விட்டு வெளியேறி இராணுவக் கட்டுபாட்டு பிரதேசத்துக்குள் வந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply