ஐரோப்பிய யூனியன் விவகாரம்: மறுதேர்தல் நடத்த 15 லட்சம் பிரிட்டன் மக்கள் வலியுறுத்தல்

eropa unionஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது குறித்து பிரிட்டனில் பொதுவாக்கெடுப்பு நடந்தது. அதில் விலக வேண்டும் என்று 51.9 சதவீதம் பேர் மெஜாரிட்டியாக வாக்களித்தனர். 48.1 சதவீதம் பேர் விலக வேண்டாம் என்று வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது உறுதியாகி விட்டது.இந்நிலையில் பிரிட்டன் பாராளுமன்ற இணையதளத்தில் வில்லியம் ஆலிவர் ஹீலே என்பவர் ஒரு மனுவை பதிவேற்றினார். அந்த மனுவில் ’வாக்குபதிவானது 75 சதவீதத்திற்கு குறைவாகவும், விலகுவது அல்லது இணைந்திருப்பது என்பதற்கான வாக்கு சதவீதம் 60 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் மறுதேர்தல் நடத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது குறித்து பொதுவாக்கெடுப்பில் 72.2 சதவீதம் வாக்கு பதிவானது, விலக வேண்டும் என்று 51.9 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மனு பதிவேற்றப்பட்டு 24 மணிநேரத்திற்குள்ளாக 15 லட்சத்திற்கு அதிகமானவர்கள் இந்த மனுவிற்கு ஆதரவாக கையேழுத்திட்டுள்ளனர்.

மக்களின் இந்த கோரிக்கைப் பற்றி வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ள பாராளுமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply