இரண்டாவது பெரிய அரசியல் தலையை பலிவாங்கியுள்ள பிரிட்டன் வாக்கெடுப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் நிலை பற்றிய பிரிட்டன் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவால் ஏற்பட்டுள்ள அரசியில் விளைவுகள் நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் தலையை பலிவாங்கியுள்ளது. எதிர்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரிமி கார்பைன், வெளிவிவகார பேச்சாளர் ஹிலாரி பென்னை பதவிலிருந்து நீக்கியுள்ளார்.
திங்கள்கிழமை விவாதிக்கப்பட இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கோர்பையின் புறக்கணித்தால், பதவி விலகுவதற்கு எதிர்கட்சியின் நிழல் அமைச்சரவையின் சக உறுப்பினர்களை அவர் ஊக்கமூட்டினார் என்று கூறப்படுகிறது. தொழிற்கட்சியின் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள், கட்சியை ஆதரித்து ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருப்பதற்கு வாக்களிக்க செய்ய கார்பினின் மந்தமான பரப்புரை தவறிவிட்டது என்று செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
தனக்கு அடுத்து வருபவர் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதை அனுமதிக்கும் வகையில் விரைவாக பதவியிலிருந்து விலகப் போவதாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply