மத்திய வங்கியின் அடுத்த ஆளுநராகிறார் இரான் விக்ரமரட்ன
மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மஹேந்திரன் மீண்டும் நியமிக்கப்படாவிட்டால், அடுத்த ஆளுநராக பிரதியமைச்சர் இரான் விக்கிரமரட்ன நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே மத்திய வங்கியின் உதவி சிரேஸ்ட ஆளுநர் சமரஸ்ரீயின் பெயரும் இந்த பதவிக்காக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் இரான் விக்கிரமரட்னவை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி தீர்மானிப்பாராக இருந்தால், இரான் விக்கிரமரட்ன, பிரதியமைச்சர் பதவியை துறப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
இரான் விக்கிரமரட்ன ஐக்கிய தேசியக்கட்சியின் மொரட்டுவை பிரதேச அமைப்பாளர் என்பதுடன் அவர் அரசியலுக்கு வரும் முன்னர் வங்கித்துறையில் உயர்பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply