ஆப்கானிஸ்தானில் போரை நிறுத்த ஒபாமாவுக்கு தலீபான்கள் கோரிக்கை
ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஒபாமாவுக்கு பாகிஸ்தானில் உள்ள தலீபான்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுபற்றி தலீபான்களின் செய்தி தொடர்பாளர் கோரி முகமது ïசுப் அகமதி நிருபர்களிடம் கூறுகையில், “அமெரிக்காவில் நடந்த தேர்தலில் புஷ் கட்சி தோல்வி அடைந்துவிட்டது. புஷ் பின்பற்றி வந்த தவறான கொள்கைகளால் தான் அந்த கட்சி தோல்வி அடைந்து விட்டது. எனவே ராணுவத்தை ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கிக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இன்னொரு செய்தி தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித் கூறுகையில், ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கு ராணுவ ரீதியாக தீர்வு காண முயல்வது முட்டாள்தனமானது என்று தெரிவித்தார். ஒபாமா ராணுவத்தை திரும்பப்பெறுவார் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply