போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக ரஷ்யாவிற்கு இழப்பீடு வழங்க தயார்: துருக்கி பிரதமர் தகவல்
துருக்கி வான் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக ரஷ்ய போர் விமானத்தை சென்ற ஆண்டு துருக்கி வீழ்த்தியது ரஷ்யாவுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இதனால், இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. போர் விமானம் அத்துமீறி தங்கள் வான் எல்லைக்குள் நுழைந்ததாகவும் திரும்ப திரும்ப எச்சரிக்கை விடுத்தும் தங்கள் எல்லையை விட்டு வெளியேறாததால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக துருக்கி கூறியது. மேலும் இச்சம்பவத்திற்கும் மன்னிப்பு கோர முடியாது எனவும் பிடிவாதமாக கூறியிருந்தது.
அதேவேளையில்,துருக்கி வான் எல்லைக்குள் விமானம் நுழையவில்லை எனவும் திட்டமிட்டு இந்த அத்துமீறலை துருக்கி அரங்கேற்றியதாக ரஷ்யா பகிரங்கமாக குற்றம் சாட்டியது. இதனால், இரு நாட்டு உறவில் பதட்டமான சூழல் நீடித்து வந்தது.
இதற்கிடையே, போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மன்னிப்பையும் துருக்கி அதிபர் எர்டோகன் கேட்டுக்கொண்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை நேற்று தெரிவித்து இருந்தது. மேலும், வரலாற்று சிறப்புமிக்க ரஷ்ய-துருக்கி நட்புறவை மீண்டும் மலரச் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் எர்டோகன் தெரிவித்ததாக ரஷ்ய வெளியுறவுத்துறை தகவல் வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில், போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் தேவைப்பட்டால், இழப்பீடு வழங்க தயாராக இருப்பதாக துருக்கி பிரதமர் பினாலி யில்டிரிம் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply