வினுப்பிரியா தற்கொலை வழக்கில் இளைஞர் கைது செல்போன், சிம்கார்டை பறிமுதல் செய்து விசாரணை
ஆசிரியை வினுப்பிரியா தற்கொலை வழக்கில் போலீஸ் சுரேஷ் என்பவரை கைது செய்துஉள்ளது. அவருடைய செல்போன் மற்றும் சிம்கார்டை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறது. சேலம் மாவட்டம் இடங்கணசாலையை சேர்ந்த அண்ணாதுரை-மஞ்சு தம்பதியின் மகள் வினுப்பிரியா (வயது 22). ஆசிரியை பணி செய்த அவர், திருமணத்திற்கு தயார் ஆன நிலையில், அவரது புகைப்படத்தை மார்பிங் செய்து, அதை வலைத்தளத்தில் பரவவிட்ட மர்ம ஆசாமி தனது மாமா மற்றும் தந்தைக்கும் அனுப்பிய, அவமானம் தாங்காமல் உயிரை மாய்த்து கொண்டார். வினுப்பிரியா தற்கொலை சம்பவம் பூதாகரமாக மாறிய பிறகு, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவின்பேரில் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையிலான குழுவினர் துரித விசாரணையை தொடங்கி உள்ளனர்.
ஆசிரியை வினுப்பிரியாவின் பேஸ்புக் படத்தை எடுத்து மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்ட ஆசாமி, எந்த இன்டர்நெட் புராட்டகால் நெட்வொர்க் முகவரியில் (ஐ.பி.எண்) இருந்து அனுப்பி இருக்கிறான் என்பதை சம்பந்தப்பட்ட நெட்வொர்க் நிறுவனத்திடம் பேசி அலசி ஆராயும் பணியை தொடங்கினர். அவர்களின் தேடுதல் வேட்டைக்கு பலனாக வினுப்பிரியா புகைப்படத்தை மார்பிங் செய்யப்பட்டதாக சொல்லப்படும் முகவரி (ஐ.பி. எண்) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனுள் புகுந்து சைபர்கிரைம் போலீசார் பார்க்கையில், அதில் ஒரே ஐ.பி. எண்ணைபோல 100-க்கும் மேற்பட்ட எண்கள் இருப்பதை குற்றவாளியை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
அதுமட்டுமல்லாது, புகைப்படத்தை மார்பிங் செய்து பரவவிட்ட ஆசாமிக்கு எப்படி தற்கொலை செய்து கொண்ட வினுப்பிரியாவின் மாமா மற்றும் தந்தையின் செல்போன் எண் தெரிந்தது என்றும், தொடர்புக்கு என்று தந்தை அண்ணாதுரையின் செல்போன் எண்ணை எப்படி பதிவு செய்தான்? என்பதும் சந்தேகத்திற்கிடமாகியது. இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இவ்வழக்கில் சேலம் மாவட்டம் கல்பாரப்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். சுரேஷிடம் இருந்து செல்போன் மற்றும் சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply