தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்: மன்னிப்பு கேட்க சல்மான்கான் மறுப்பு
பலாத்காரத்திற்கு ஆளான பெண்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில், சல்மான்கான் மன்னிப்பு கேட்க மறுத்துள்ளார்.இந்தி நடிகர் சல்மான் கான், தான் மல்யுத்த வீரராக நடித்துள்ள சுல்தான் படம் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் பேட்டி அளித்தார். அதில், சுல்தான் படப்பிடிப்பில் மிகவும் சிரமப்பட்டு நடித்ததாக கூறிய சல்மான் கான், 6 மணிநேரம் 120 கிலோ எடையை தூக்க வேண்டி இருக்கிறது.
மல்யுத்த சண்டை காட்சியிலும் நடிக்க வேண்டி உள்ளது. இதனால் களைப்பாக இருக்கிறேன். நேராக நிற்கவோ, நடக்கவோ முடியாது. தினமும் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பும்போது நேராக நடந்து செல்ல முடியாமல், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணைப் போல உணர்வதாக கூறியிருந்தார்.
சல்மானின் கான் இந்த பேச்சு பெண்களை இழிவு படுத்துவதாக உள்ளது என்று பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு இந்த நடிகர் சல்மான் கானுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு தனது வழக்கறிஞர் மூலமாக சட்டப்பூர்வமாக பதில் அளித்துள்ள சல்மான்கான், தான் கூறியது வேண்டுமென்றே சர்ச்சையாக்கப்பட்டது. இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என கூறியுள்ளார்.
வழக்கறிஞர் மூலமாக சல்மான்கான் அளித்துள்ள விளக்கத்தை ஆராய்ந்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை தீர்மானிக்க உள்ளதாக தேசிய மகளிர் ஆணைய தலைவர் லலிதா குமாரமங்கலம் தெரிவித்துள்ளார்.
தேசிய மகளிர் ஆணையத்தைச் சேர்ந்த சுவாதி மலிலால் கூறுகையில், சல்மான் கான் மிகப்பெரிய திரை நட்சத்திரம். அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனிடையே இந்த விவகாரத்தில் சல்மான் கான் ஜூலை 7ஆம் தேதி நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மும்பை மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply