மஹிந்தவுக்கும், சம்பந்தனுக்கும் புதிய வாசஸ்தலங்கள்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கும், உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் விரைவில் பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.அவர்களுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் இதுவரை வழங்கப்படாமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது எதிர்க்கட்சித் தலைவருக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலம் தொடர்பில் தெரிவித்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க; எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தமக்கு கீழ்மாடியைக் கொண்ட வாசஸ்தலத்தைத் தந்தால் நல்லது எனத் தெரிவித்துள்ளதால் வீடு வழங்கும் நடவடிக்கை சற்றுத் தாமதமாகியது.
அதே போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலம் இனங்காணப்பட்டுள்ளதுடன் அதனையும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply