பிலிப்பைன்ஸின் புதிய அதிபராக ரொட்ரிகோ ட்யூடெர்த் பதவியேற்பு
பிலிப்பைன்ஸில், சர்ச்சைக்குரிய முன்னாள் மேயரான ரொட்ரிகோ ட்யூடெர்த், அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.தனது அலுவலகத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு உரையாற்றிய ட்யூடெர்த், குற்றங்களுக்கு எதிரான போராட்டம் தளர்வில்லாமலும், நீடித்தும் இருக்கும் என்று தெரிவித்தார். ஆனால், அது சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டே இருக்கும் என்றும் தெரிவித்தார்.பிலிப்பைன்ஸ் நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான டாவோ நகரின் மேயராக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்த ரொட்ரிகோ ட்யூடெர்த், சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளை கண்டவுடன் சுட்டுக் கொல்லும் கொள்கையை ஆதரித்தார்.
இதனால், அவருக்கு ”தண்டிப்பாளர்” என்ற புனைப்பெயர் சூட்டப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எவ்வித சட்ட வழிமுறையும் கடைப்பிடிக்கப்படாமல் கொல்லப்பட்டதாக மனித உரிமை குழுவினர் கூறியுள்ளனர்.
கடந்த மாதம் நடந்த தேர்தலில், பிலிப்பைன்ஸ் நாட்டின் ஆளும் அரசியல் அமைப்பை ட்யூடெர்த் தோற்கடித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply